search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுகு வலி"

    முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.
    * முதுகு வலி என்றாலே தண்டு வட பாதிப்பு மட்டும் தான் என்று பொருள் அல்ல. அநேகர் இவ்வாறு பயந்து விடுகின்றனர். சில நேரங்களில் முறையற்று கோணலாக அமரும் பழக்கம், பலமிழந்த தசைகள். இறுகிய தசைகள் போன்ற காரணங்களாலும் இருக்கலாம். மருத்துவர் மூலம் காரணம் அறிந்து எளிதில் நிவாரணம் பெற முடியும்.

    * வலி நிவாரணம் பெற்றாலும் மீண்டும் திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர வேண்டும். எனவே தொடர்ந்து மருத்துவர் குறிப்பிட்ட பயிற்சிகள், யோகா, அமரும் போதும், நடக்கும் பொழுதும் முறையாய் இருத்தல் ஆகியவற்றினை தொடர்ந்து செய்ய வேண்டும்.

    * வலி லேசாக இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கவனிப்பு இல்லாமல் இருப்பது பாதிப்பினை மிக அதிகப்படுத்தி ஆபத்தான நிலைக்கு கொண்டு விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.

    * அதிக ஓய்வு முதுகுவலியினை தீர்க்கும் என்பது தவறான கருத்து. ஒரிரு நாட்கள் ஓய்வு எடுங்கள். பொதுவில் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பதே முதுகுவலி இல்லாமல் வைக்கும். பாதிப்பு ஏற்படும் நேரத்தில் அளவான நடை போன்றவற்றினை கையாளலாம்.

    இன்று அனேகருக்கு சுவீட்ஸ் அடிக்கடி, அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. காரணம் சர்க்கரை உள்ளே சென்றவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இதற்கான காரணத்தினை மற்றொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம். ஆனால் இந்த அதிக சர்க்கரை உடலில் கொலஜன் உருவாகுவதனை தருகின்றது. இதன் வெளிப்பாடாக சுருக்கம், சோர்ந்த சருமம், சரும வெடிப்புகள் போன்றவை ஏற்படும்.

    ஆனால் பலவகை சுவீட் உணவுகளால் பழக்கப்பட்ட நமக்கு, திடீரென சுவீட்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று சொன்னால் அனேகருக்கு இது கடினமாக இருக்கலாம். ஆகவேதான் பழங்களை வெட்டி உண்ணுங்கள். காய்கறிகளை சாலட் முறையில் உண்ணுங்கள். காய்கறி சாறு அருந்துங்கள் என அறிவுறுத்தப்படுகின்றனர். இது சுவீட்ஸ் உண்ணும் பழக்கத்தினை வெகுவாய் கட்டுப்படுத்தும்.

    அதிக சர்க்கரையினை நிறுத்திய உடன்

    * உடலில் புது சக்தி உருவாகும்.

    * தேவையற்று கூடிய இதய துடிப்பு சீராக இருக்கும். எடை குறையும்.

    * எளிதில் சோர்வடையாது நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருப்பர்.

    * பல் ஆரோக்கியம் கூடும்.

    * உடல் உப்பிசம் இராது. இன்றிலிருந்து நமக்கு சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் இனிப்புகளை தவிர்ப்போம்.
    இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நைட்டு நல்லாதான் தூங்குனேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு. முதுகு வேற வலிக்குது…” காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை. இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    நன்றாக தூங்கி எழுந்தபிறகு, முதுகு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு, நாம் சரியான நிலையில் தூங்காமல் இருப்பதும், சரியான இடத்தில் தலையணை வைத்துத் தூங்காமல் இருப்பதுமே காரணம். தூங்கும் முறையும், தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் ரொம்பவே முக்கியம்.

    கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால்..?


    தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புற முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு பக்கமாக (side lying) அல்லது நேராக(மல்லாந்து) படுத்தால் (Supine lying) வலி குறையும். இப்படிப் படுக்கும்போது, முதுகுத் தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் சென்று, கழுத்துப் பகுதி தளர்வடையும். அதனால் வலி குறையும். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்கும் தலைக்கும் இடையில் வைத்துத் தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும் .



    முதுகின் கீழ்ப்பகுதியில் வலி இருந்தால்?

    ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தால், முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலி குறையும். ‘நேராகப் படுத்தே பழகிவிட்டேன், ஒரு பக்கமாக படுத்தால் தூக்கம் வராது’ என்பவர்கள் தலையணையை முழங்காலுக்குக் கீழ் வைத்துத் தூங்கலாம். இது ஓரளவுக்குத்தான் பயனளிக்கும். ஒரு பக்கமாக சாய்ந்து தூங்கப் பழகிக் கொள்வது நல்லது.

    முதுகின் கீழ்ப்பகுதியில் வலி உள்ளவர்கள் குப்புறப்படுத்துத் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும். அப்படித் தூங்கினால் வலி அதிகமாகும். தவிர, கழுத்தில் உள்ள தசைகள், நரம்புகளை இறுக்கி வலியை அதிகரிக்கும்.

    முதுகின் நடுவில் ஏற்படும் வலியைக் குறைக்க!

    சேரில் உட்காரும்போது, முன்புறமாக குனிந்து உட்காருவது, வலதுபுறமாகவோ, இடதுபுறமாகவோ சாய்ந்தபடி உட்காருவது, நடக்கும்போது குனிந்தபடியே நடப்பது போன்ற செயல்பாடுகளால் முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தவாறோ தூங்கினால் இந்தப் பாதிப்பை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

    உட்காரும் நிலையை மாற்றினால் மட்டுமே இந்த வலியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து, பின்புறமாக லேசாக சாய்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்கலாம். மேலும், மசாஜ், ஃபோர்ம் ரோலிங், நெஞ்சுப் பகுதிக்கான ஸ்ட்ரெட்ச்சிங், முதுகுப் பகுதிக்கான உடற்பயிற்சிகள் போன்றவை வலியைக் கட்டுப்படுத்தி நன்றாக தூங்க உதவிபுரியும்.
    மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும்.
    முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது.

    புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதுகுவலி பாதிப்புக்கு அதிகம் ஆளாவார்கள். தொடர்ந்து புகை பிடிப்பதன் மூலம் முதுகெலும்பில் சிதைவு ஏற்படக்கூடும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி முதுகெலும்பை பலவீனப்படுத்தும். முதுமை பருவத்தை எட்டும்போது அதன் பாதிப்பு அதிகமாகும். கடும் முதுகுவலியால் அவதிப்பட நேரிடும்.

    மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும். முதலில் முதுகுவலி குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியின் தீவிரம் அதிகமாகும்.

    உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களில் பெரும்பாலானோர் ஜிம்முக்கு சென்று அதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதற்காக இப்போது நிறைய பேர் வீடுகளிலேயே சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளாவிட்டால் முதுகு தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். தசைகளின் செயல்பாடு அளவுக்கு அதிகமாகும்போது முதுகுவலி தோன்றும்.

    உடல் தசைகள் முழுவதும் சீராக அமைந்து உடல் எடையை சுமப்பதற்கு ஏற்பவே முதுகெலும்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிக எடை அல்லது உடல்பருமனாக இருக்கும்போது அந்த கூடுதல் எடையை தாங்குவதற்கு முதுகெலும்பு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இறுதியில் எலும்பு தசைகள் சேதமடைந்து முதுகு வலியை ஏற்படுத்திவிடும்.

    இரு கால்களின் நீளத்தில் வேறுபாடு கொண்டவர்களும் முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள். கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால்கூட பாதிப்பை ஏற்படுத்திவிடும். கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.

    தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகுவலிக்கும் தொடர்பு இருக்கிறது. காயங்கள் வலியை ஏற்படுத்தும்போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகும். அது வலியை அதிகப்படுத்திவிடும்.
    நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் ‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் பங்கு மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    ‘இயன்முறை மருத்துவம்’ என்பது மருந்துகள் இன்றி இயற்கையாக உடற்பயிற்சியின் மூலம் உடலை பக்குவப்படுத்தும் மருத்துவ முறையாகும். இது உடல் இயக்கத்தை முறைப்படுத்தும் மருத்துவத் துறையாகும்.

    ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும்போது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்கும். அப்போது இயன்முறை மருத்துவம் தான் உடற்பயிற்சி மூலம் உடலை இயக்க நிலைக்கு கொண்டு வந்து அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க துணை செய்கிறது.

    பெரும்பாலானோர் மூட்டுவலி, கழுத்துவலி, முதுகு வலி, ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 75 சதவீதம் பேர் இயன்முறை மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பிறக்கும் போதே சில குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர். மற்றும் கை, கால் மடிந்து அல்லது பிறந்த பிறகு கீழே விழுந்து பாதிப்படைகிறது. அப்போது அதனை மருந்தால் சரிசெய்ய இயலாது. இயன்முறை மருத்துவம் செய்யப்பட்டு அது சரி செய்யப்படுகிறது.

    விபத்தால் சிலர் கை, கால் மற்றும் எலும்பு முறிவுகளை அடைகின்றனர். அதனை மீண்டும் பழைய நிலைக்கு இயங்க வைக்க ‘பிசியோதெரபி’ முறை பயன்படுத்துகின்றனர்.

    மருந்துகள் இன்றி மருத்துவம் பயன்படுத்தும் ஒரே மருத்துவம் ‘இயன்முறை மருத்துவம்’ மட்டுமே.

    உடல் பருமனை உடற்பயிற்சி மூலமே சுலபமாக குறைக்க முடியும். அன்றாட செய்யும் உடற்பயிற்சியால் உடல் எடை மற்றும் மூட்டுவலி இருதய பிரச்சினை அனைத்தும் சரி செய்ய இயன்முறை மருத்துவம் பெரிதும் உதவுகிறது.

    நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் ‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் பங்கு மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    ஒருவருக்கு குறிப்பிட்ட நிலையில் தாம்பத்தியம் கொள்ளும் போது முதுகு வலி வருகிறது எனில், அந்த நிலையை தவிர்த்து விட வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    செக்ஸ் மீதான ஆசையும், அது பற்றிய அறிவும் மட்டும் இருந்தால் போதாது. அதில் ஈடுபட ஆரோக்கியமாக உடலை வைத்திருப்பது அவசியம் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.

    சமீபத்திய உலக அளவிலான ஆன்லைன் சர்வே ‘செக்ஸில் ஈடுபடும் போது மூன்றில் ஒரு பங்கு மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்’ எனச் சொல்கிறது. கடின உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறையே பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி வர காரணமாக அமைகிறது. பிரிட்டிஷ் மருத்துவ இதழ் 58 சதவிகித மக்களுக்கு உடலுறவின் போது ஒரு முறையாவது முதுகு வலியோ, இடுப்புப் பகுதியில் வலியோ ஏற்படுகிறது என அறிவித்து இருக்கிறது.

    முதுகுத் தசைகளில் ஏற்படும் அழுத்தமும், தசைநார்கள் பலவீனமடைவதும் 80 முதல் 90 சதவிகிதம் முதுகுவலிக்கு அடிப்படை காரணம். இதனால் முதுகு தண்டுவடத்தினுள் பிரச்சனைகள் எதுவுமிருக்காது. அதனால் கவலைப்படத் தேவையில்லை. முதுகுத் தசைகளை வலுப்படுத்தினால் போதுமானது. முதுகுத் தசைகளை நல்ல நிலையில் வைக்கும் வார்ம்-அப் உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.



    ஒரு பிசியோதெரபிஸ்டின் ஆலோசனையின் படி முதுகு தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால் இன்னும் நல்லது. முதுகுதசைகள் வலுவாக இருந்தாலே முதுகு தண்டுவடத்தை சரியான இடத்தில் நிறுத்தி அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். Core muscles என ஆங்கிலத்தில் குறிப்பிடும் முதுகு, இடுப்பு, வயிற்றின் முக்கிய தசைகளை வலுவாக்க வேண்டும். இதன் மூலம் உடலுறவில் எந்த வலியும் இல்லாமல் சிறந்த முறையில் ஈடுபட முடியும்.

    ஒருவருக்கு குறிப்பிட்ட நிலையில் உடலுறவு கொள்ளும் போது முதுகு வலி வருகிறது எனில், அந்த நிலையை தவிர்த்து விட வேண்டும். முதுகு வலியை ஏற்படுத்தாத நிலைகளில் மட்டுமே செக்ஸில் ஈடுபட வேண்டும். தீவிரமாக இயங்காமல் கொஞ்சம் மெதுவாக இயங்கினால் நீடித்த இன்பம் பெறலாம். படுக்கையானது கடினமான மெத்தையால் அமைந்திருக்க வேண்டும்.

    படுத்தவுடன் உள்ளே அமுங்கும் மெது மெத்தைகளை பயன்படுத்தினால் முதுகுவலிக்கான வாய்ப்பை அதிகமாக்கும். உடலுறவின் போது மூட்டுவலி வராமல் இருக்க மூட்டுகளுக்கு அடியில் தலையணை வைத்து இயங்க வேண்டும். முதுகில் அதிக அழுத்தம் கொடுக்காமல் இயங்க பழகிக்கொள்ள வேண்டும். யோகா, பிசியோதெரபி பயிற்சி எடுத்து முதுகை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் நலமுடன் இருக்கும்.
    அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகு வலியில் இருந்து விடுபட 10 வழிகளை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம்.
    இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களிடம் உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. உட்கார்ந்த இடத்திலேயே 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதன் காரணமாக அவர்கள் முதுகுவலியில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. இதில் இருந்து விடுபட 10 வழிகளை மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம் என்றும், இதனால் கவலை வேண்டாம் என்றும் தெரிவிக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

    1. தினமும் காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை மேல் நோக்கி நீட்டுங்கள்.

    2. அமரும்போது வளையாதீர்கள்.

    3. தினமும் 21 முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

    4. தினமும் குறைந்தபட்சம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

    5. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

    6. இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

    7. சுருண்டு படுக்காதீர்கள்.

    8. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

    9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

    10. 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள். 
    சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம்.
    இதயம், நுரையீரல், மூளை போன்று உடலுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியம் தான். உடலின் அனைத்து உறுப்புகளும் அதனதன் பணியை சிறப்பாக செய்கின்றன. அந்த வகையில் இதயம், ரத்தத்தை சுத்திகரிக்கிறது. நுரையீரல், சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தில் பிராண வாயுவை நிரப்பி அனுப்புகிறது. மூளை, ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இவ்வாறு உடலின் உள்உறுப்புகள் செய்யும் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

    இத்தகைய உள்உறுப்புகளின் பட்டியலில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது. பொதுவாக தண்டுவடம் பாதிக்கப்படுவதால் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. அதனால் சிறு வேலைகளுக்கு கூட பிறர் உதவியை நாடும் நிலை வந்து விடும். இத்தகைய சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை தலைமை மருத்துவர் வடிவேல் கூறியதாவது:-

    தண்டுவட நரம்பு மண்டலம்

    நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்பு முறிவு, அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு, வயது முதிர்வு மற்றும் பிறவிக்குறைபாடு போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. இது தவிர காசநோய் கிருமி மற்றும் பிற நோய்க்கிருமி தாக்குதலாலும் தண்டுவட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

    செயல்பாடுகளில் பாதிப்பு

    பொதுவாக விபத்தினால் தண்டுவட எலும்பு முறிந்தால், உடைந்த எலும்புகளுக்கு இடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் நரம்புகள் அழுத்தப்படும் நிலை உருவாகும். அதனால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும். அதனால் தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.

    அதேபோல் தண்டுவடத்தின் எலும்பு, கழுத்து பகுதியில் முறிந்தால், கை-கால் செயல் இழப்பு, மார்பு மற்றும் வயிறு, முதுகு பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சு திணறல், உணவு விழுங்குதலில் பிரச்சினை ஏற்படும். கழுத்து எலும்புக்கு கீழ் என்றால் கால்கள், உடல், இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலில் முதுகில் படுக்கைபுண் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.



    அறிகுறிகள்

    இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் நேராக, முன், பின்பக்கம் என 3 நிலைகளில் குனியவைத்து எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாலும், சி.டி.ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். இதுதவிர ரத்தபரிசோதனையிலும் தெரிந்து கொள்ளலாம்.

    பிசியோதெரபி

    அவ்வாறு கண்டறிவதில் தண்டுவடத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தால், நோயாளியின் வயது, எலும்பு முறிவின் அளவு, தண்டுவட நரம்பு செயல்பாடுகளை பொறுத்து பிசியோதெரபி மூலம் சரி செய்ய இயலும். அவ்வாறான சிகிச்சையில் சிலருக்கு ஒரு ஆண்டில் குணம் ஆகும். பாதிப்பு அதிகமாக இருந்தால் குணமடைய 2 அல்லது 3 ஆண்டுகள் கூட ஆகலாம். இந்த காலகட்டத்தில் தவறாமல் அதற்குரிய மருந்து, மாத்திரைகளை உண்ண வேண்டும்.

    பொதுவாக பிசியோதெரபி செய்தும், மருந்து மாத்திரைகளை உண்டும் தண்டுவட பாதிப்பு சரி ஆகவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்டம் அறுவை சிகிச்சைதான். அப்போது தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது.

    சக்கர நாற்காலி

    தண்டுவடத்தில் முழு அளவில் முறிவு ஏற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது. ஆனால் அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்த போதிய பயிற்சி, பிசியோதெரபி, ஆலோசனைகளை பெற வேண்டும். இதுதவிர ஒரு சிலருக்கு சக்கர நாற்காலி உதவி தேவைப்படலாம். அதன் உதவியால் வீட்டிற்குள் சிறு பணிகளை செய்யலாம். அலுவலகத்துக்கு செல்ல முடியும். மேலும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு விளையாடவும் முடியும்.

    பொதுவாக தண்டுவட பிரச்சினை என்பது குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயதானவர்களுக்கு மட்டும் கால்சியம் சத்து குறைபாடால் இந்த பிரச்சினை வர வாய்ப்புண்டு. அதனை உணவு முறையால் சரி செய்ய இயலும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர். ஆனால் கீழ் இடுப்பு வலி இருப்பவர்கள் சில வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
    இன்றைய பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

    இவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…

    இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.

    * உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

    * உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.

    * ஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.

    * அதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.

    * மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.

    * நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.

    * வலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
    முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம். இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறையை பார்க்கலாம்.
    கழுத்து வலி வயதாகும்போது, முதுகுத்தண்டு, கழுத்து இவற்றை இணைக்கும் எலும்புகள், கார்டிலேஜ் எனப்படும் ஜவ்வுகள் ஆகியன பழுதடையும், கிழியும் நிலை ஏற்படலாம்.

    முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம், மதுப்பழக்கம் காரணமாக வரலாம்; பரம்பரை காரணமாக வரலாம்; கழுத்தை ஒரே நிலையில் அதிகநேரம் வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ள தொழில் காரணமாக வரலாம்.

    65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத மக்களுக்கு இந்நோய் இருப்பதை கழுத்து எக்ஸ்ரேக்கள் காட்டுகின்றன. பலருக்கு இந்நோய் அதிக தீவிரமாகும் வரை, அறிகுறிகள் ஏதும் தென்படாது. திடீரென பாதிப்பு வரும். வலியும், இறுக்கமும் உண்டாகும்.

    முதுகுத்தண்டுக்கும், அதனுடே பயணிக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதால், நரம்போ, முதுகுத்தண்டோ அழுத்தப்படுவதால் வரலாம். அவ்வாறு அழுத்தப்படும்போது, கை, கால், தோள், பாதம் ஆகிய உறுப்புகளில் நடுக்கம், உணர்ச்சியின்மை, வலுவிழத்தல் ஆகியன நேரலாம். நடக்கச் சிரமம் ஏற்படும். உறுப்புகளுக்கிடையேயான தொடர்பு இணைப்பு பாதிக்கப்படலாம். சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இழக்க நேரிடும்.

    முதுகுத்தண்டின் ஒவ்வொரு கண்ணிக்கும் இடையே உள்ள வட்டு ஆனது அதிர்வைத் தடுக்கும் மெத்தை போல இயங்கும். 40 வயதாகும்போது, பெரும்பாலானவர்களின் முதுகுத்தண்டு வட்டு உலர்ந்து, சுருங்கி ஒரு வட்டு உடன் மற்றொன்று உராய்ந்து போகத் தொடர்கிறது.வட்டு இன் வெளிப்புறம் பாதிக்கப்படலாம். வெடிப்புகள் உண்டாகி, எலும்பு உப்பி விடுவோ அல்லது டிஸ்க் இடையே உள்ள ஜவ்வு இடம் பெயர்வதோ நடக்கிறது.

    அவை நரம்பு/முதுகுத்தண்டை அழுத்த நேரலாம். டிஸ்க் தேய்மானம் காரணமாக, நமது நோய் எதிர்ப்புத் திறன் சக்தியானது, முதுகுத்தண்டை பலப்படுத்தும் நோக்கில் கால்சியத்தை படியச் செய்யும். அது சரியான இடத்தில் படியாமல் அதிகப்படியான வளர்ச்சியாக உருவாகி, நரம்புகளை அழுத்தும். ஓர் எலும்பை மற்றொன்றுடன் இணைக்கும் திசுக்கள் வயதாவதால் இறுகிவிடும். அதனால் கழுத்தின் அசைவு சிரமமாகும். அதிகம் அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்போது நிரந்தரமான பழுது/ பாதிப்பு ஏற்படும்.

    ஆயுர்வேத சிகிச்சை முறை:

    அடிப்படையில், ஆயுர்வேத சிகிச்சை முறையானது வாத, பித்தம் எனப்படும் 3 தோஷங்களையும் சமநிலையில் வைப்பதே ஆகும். ஆரோக்கியமான ஒருவருக்கு, இந்த 3 தோஷமும் சமநிலை ஆக இருக்கும். இவற்றின் முக்கிய வேலைகள், அசைவுகளில் மற்றும், வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம், ஸ்திரத்தன்மையைக் காத்தல் ஆகியன ஆகும்.

    இந்த 3 தோஷங்களின் சமநிலையில் மாறுதல் ஏற்படும் போது, ஆரோக்கியம் கெடுகிறது; நோய் வருகிறது சோதனா (சுத்திகரிப்பு/கழிவுநீக்கம்) சமனா. யோகா ஆகிய சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் தோஷங்களின் சீர்குலைவை மாற்றி, சமநிலைக்கு கொண்டுவருவதே ஆகும்.

    உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைமாற்றம் ஆகியனவற்றில் மாறுதல் கொண்டு வருவதன் மூலம் ஆன்மிகம், மனம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை நல்லமுறையில் காக்கவும், முன்னேற்றம் காணவும் முடிகிறது.

    மூன்றுவித சிகிச்சை முறைகள்:

    சமன சிகிச்சை:

    பல்வேறு மருந்துகள், மூன்று தோஷங்களைச் சமநிலைப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகின்றன. சிறு குழந்தைகள், வயதானவர்கள், உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாதவர்கள், நடைமுறை மாற்றங்களை அனுசரிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு பஞ்சகர்மா சிகிச்சை தர முடியாது; பஞ்சகர்மா சிகிச்சை தரமுடியாத போது, மருந்துகள் மூலமாக மட்டுமே, நோயைத் தீர்க்க முடியும்.

    சோதனா சிகிச்சை முறை:

    பஞ்சகர்மா சிகிச்சை மூலம், உடலில் இருக்கும், அதிகப்படியான தோஷங்களை நீக்குவதே சோதனா சிகிச்சை, இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், விரைந்து குணம் கிடைக்கும் தவறு நேரும் பட்சத்தில் மிகுந்த பிரச்சனைகள், குழப்பங்கள் வரும்.

    பஞ்சகர்மா சிகிச்சை முன்பும், மருத்துவம் கூறும் உணவுமுறை, வாழ்வியல் முறையை அனுசரிக்க வேண்டும். பஞ்சகர்மா சிகிச்சை முறை சரியாக மேற்கொள்ளப்பட்டு, உணவுமுறை, பிறவாழ்வியல் முறை மாற்றங்களைப் பின்பற்றாவிட்டால், குழப்பங்கள் வரும்.



    ரசாயன சிகிச்சை:

    உடல் இயற்கையான உறுதி நிலைப்பாடு பெற்று, திசுக்கள் புத்துணர்ச்சி அடைந்து, அவற்றின் இயல்பான வேலைகளை மாற்றிவிடும் காரணிகளைச் சரி செய்வதே இந்த சிகிச்சை ஆகும்.வாத தோஷம் உடலில் இருக்கும் அசைவுகளுக்கானது நரம்பு மண்டலம், தசைநார் மண்டலம் ஆகியவற்றோடு முக்கியமான தொடர்பு உடையது. வாத தோஷ நிலைப்பாட்டில் மாறுதல் வரும்போது, இவ்விரு மண்டலங்களிலும் நோய் வருகிறது.
    வாத தோஷ மாறுபாடு இருவகைகளில் ஏற்படலாம்.

    (1) வாத தோஷம் தன்னிச்சையாக அதிகமாவது.

    (2) பித்தம், கபம் ஆகிய தோஷங்களில் ஏற்படும் மாறுபாட்டால் வாதம் தடைப்படுதல் என்பன அவை.

    வாதம் தடைப்படுவதால் நீர்கோர்த்து, பலூன்போல உடல் உப்பிவிடும். எங்கே வலி இருக்கிறது என்பதே தெரியாமல் ஒருவிதவலி உண்டாகும். வாதம் மிகமிக அதிகமாகும்போது, எலும்பு வட்டுகளுக்கிடையேயான தாறுமாறான வளர்ச்சி ஆகியன உண்டாகும்.

    சிகிச்சை முறைகள்:

    சோதன, சமன சிகிச்சைகள் மூலம் தடைப்பட்ட அதிகப்படுத்தப்பட்ட வாத தோஷத்தை சமநிலைப்படு-த்தி பாதிக்கப்பட்ட திசுக்களை, புத்துணர்வு பெறச்செய்வதே சிகிச்சையின் நோக்கம். இந்நோய் காரணமாக மன அழுத்தம் ஆகியன நேர வாய்ப்பு இருப்பதால் உணவு முறை மாற்றம், குறைந்த அளவிலாவது உடற்பயிற்சிகள், யோகா ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.

    வாத தோஷ சீர்குலைவு இரண்டு வகையில் நேர்வதால் அதற்கான சிகிச்சை முறையும் வெவ்வேறாக இருக்கிறது.  பிற தோஷங்களால் வாத, தோஷ மாறுபாடு நேரும்போது, அதைச் சரி செய்ய சோதன, சமன சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.வாதம் தன்னிச்சையாக மாறும்போது, பாதிப்புகளைக் குறைக்கும் புத்துணர்வு தரும் சிகிச்சைகள் தரப்படும்.

    சிகிச்சை முறைகளை வைத்து இவ்வியாதி 3 நிலைகளாக வகைப்படுத்தப்படும்.

    முதல் நிலை

    ஆரம்ப நிலையில் அவ்வப்போது லேசானவலி இருக்கும்; அவ்வப்போது இறுக்கமாக இருப்பது போல உணரப்படும். அப்போது வாத, கப, சமன மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தரப்படவேண்டும்.

    இரண்டாம் நிலை

    இந்நிலையில் கழுத்தை அசைக்கும் போது வலி மற்றும் இறுக்கம், கழுத்தின் பின்பகுதியில் வலி, அங்கிருந்து தோள், தோள்பட்டை ஆகிய பகுதிகளுக்கு வலி பரவுதல் ஆகிய காணப்படும். அதற்கு வாத-பித்த சமன மருந்துகள் மற்றும் வாத-பித்த சமன சிகிச்சை தரப்படும்.

    மூன்றாம் நிலை

    வாந்தி வருவது போன்ற உணர்வு, நடக்கும் நடை மாறிப்போதல், மயக்கம், சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலை ஆகியன காணப்படும். இதற்கு வாதசமன மருந்துகளும், வாத சமன சிகிச்சையும் தரப்படும்.

    - டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
    இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பஸ் ஓட்டுநர்களும் முதுகுவலிக்கு தப்பிப்பது கிடையாது. தொடர்ந்து இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு காரணம் குண்டும், குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுதண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுவதோடு, கணினி முன்னால் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்த பிரச்சினை இன்னும் அதிகரித்துவிடும்.

    இதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு குறைவு. முதுகுவலி பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான மோட்டார் சைக்கிளை பயன்படுத்தலாம். அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் ‘லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகுவலி வராமல் தடுப்பதற்கு ‘பேக் எக்ஸர்சைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்.



    மிகவும் இறுக்கமான பேண்ட், பெல்ட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். இது முதுகுவலி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும்போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். அடி முதுகு(லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் ‘லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்கு தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம். அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக்கொள்ளலாம். அல்லது பெரிய துண்டை மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக்கொள்ளலாம்.

    தொடர்ந்து இருசக்கர வாகனம் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். குண்டும், குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியை தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும், குழியுமான சாலைகள்தான் முதுகுவலி தொல்லைகள் ஏற்பட முக்கிய காரணம்.
    முதுமை வயதை அடையும் போது, கூன் ஏற்படும் நிகழ்வு என்பது இயல்பான ஒரு விஷயமாகும். முதுமை வயதில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
    முதுமை வயதை அடையும் போது, கூன் ஏற்படும் நிகழ்வு என்பது இயல்பான ஒரு விஷயமாகும். முதுமை வயதில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

    நமக்கு முதுமையில் கூன் ஏற்படுவதற்கு, முதலில் நமது கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் பழுதுபடுவதே காரணமாகும். நாம் தலையில் அதிக பளு தூக்குவது, கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது இது போன்ற காரணங்களினால் தான் கழுத்து எலும்புகள் பாதிக்கப்பட்டு, முதுகு எலும்பு தேய்மானம் அடைந்து கூன் விழும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. நமது உடம்பில் உள்ள வம்சி இடைத்தட்டானது அடிபடும் போதும், அல்லது பல காரணங்களினால் இயல்பான இடத்திலிருந்து விலகி விடுகிறது.

    மேலும் இதனால் மேலும் கீழும் இருக்கும் வம்சிகள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று உராய்வதால், அது நாளடைவில் எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு முதுகெலும்பு அமைப்பு இயல்பான நிலையிலிருந்து விலகி சற்று முன்னோக்கி சாய்ந்து கூன் போன்ற தோற்றத்தைத் தருகிறது.



    நமது முதுகெலும்புகள் பழுதடைவதற்கான காரணங்கள் என்ன?

    இயந்திரங்களில் அதிக நேரம் பணியாற்றி, அதிகப்படியான பளு தூக்குதல்.

    தினமும் அதிகமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை உபயோகிப்பது.

    நமக்கு பொருத்தம் இல்லாத இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை மற்றும் பயணம் செய்தல்.

    புகைப்பழக்கம், மது, போதைப் பழக்கம் அதிகமாக இருப்பதால், மன உளைச்சலுடன் நீண்ட நேரம் வேலை செய்வதல்.

    மிகுந்த கோபம், தாழ்வு மனப்பான்மை மற்றும் விபத்தால் முதுகுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருத்தல்.
    நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல... மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல... மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். நினைவாற்றல் இழப்பு, வெற்று எண்ணம், கவனக்குறைபாடு, தன்னைச் சுற்றி நடப்பதை உள்வாங்காமல் இருப்பது, தனிமை, மனஅழுத்தம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும்.

    நீண்ட நேரம் ஏ.சி-க்கு அடியில் நாற்காலியில் அமர்ந்தபடியே வேலை பார்ப்பதால், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும். வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து போன்றவை நம் உடலுக்குக் கிடைக்காது.’’

    நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் நம்முடைய ஆக்டிவிட்டி லெவல் (Activity level) குறையும். இதனால் உடல் சோம்பலடையும். `நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் முதுகுவலி ஏற்படும்’ என்று சொல்வார்கள். உண்மையில், இடுப்புவலிதான் ஏற்படும். உட்கார்ந்திருக்கும்போது நம் உடல் எடை இடுப்புத் தசைகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அழுத்தத்தால், முதுகுத்தண்டு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளில் வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படும். சிலருக்கு சிறுநீரகக் கல்லை உண்டாக்கும்.



    முன்பெல்லாம் 50 வயதுகளில்தான் மூட்டுத் தேய்மானம் ஏற்படும். இப்போது, உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், உடல் உறுப்புகளின் சீரான செயல்பாடு இல்லாமல் போகிறது. அது, மூட்டுத் தேய்மானத்துக்கு வழிவகுக்கும். நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால், நமது கால்களிலேயே ரத்தம் தங்கிவிடும். உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம் நிகழாமல் போய்விடும்.

    நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் சில உறுப்புகளின் செயல்பாடு உடலுக்குத் தேவைப்படாமல் போய்விடும்.இப்படி அந்த உறுப்புகள் தொடர்ந்து செயல்படாமலிருந்தால் காலப்போக்கில் அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும். கால், வயிறு மற்றும் தசைகளில் செயல்கள் நடைபெறாமல் நின்று போகும். நாளாக, ஆக பல நோய்கள் ஏற்பட இதுவும் காரணமாகிவிடும்.

    நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்தால், கால்களிலேயே ரத்தம் தங்கிவிடும். இந்த ரத்தம், கால்களில் உள்ள தசைகளின் இயக்கத்தால் அழுத்தம் பெற்று, இதயத்தை நோக்கிச் செலுத்தப்படும். ரத்த ஓட்டம் தேங்கி இருப்பதால், மூளைக்கும் இதயத்துக்கும் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இதனால், கால், மூளை, இதயம் போன்ற பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்களில் கட்டிகள் உண்டாக வாய்ப்பு உண்டு. ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்கூட உண்டு.
    ×